108 Divya Desa Kriti composed by Dr Rukmini Ramani -Thirukudandhai Kshetram- Rendered by Vid. Gayathri Girish

|

papanasamrukminiramani

108 Divya Desa Kriti “ Aaravamudhane saaranga raajane” composed by Dr Rukmini Ramani -Thirukudandhai Kshetram – Ragam – Vakulabaranam , Talam -Misra Chapu – rendered by Vid. Gayathri Girish
Dr Rukmini Ramani has composed kritis on all 108 Divya Desams.

Visit rukminiramani.com

Thirukudandhai Kshetram
Ragam – Vakulabaranam Talam – Misra Chapu
Pallavi
Aaravamudhane saaranga raajane
Theeraa vinai theerkka thirukudandhai amarndhavane (Aara)
Anupallavi
Oor aayiram kodi pergalum bajithida
Paar anjum pralayathil paarthanai kaathavane
(Aara)
Charanam
Hemarishiyin kumaariyaana
Komalavalli thanai manam kondavane
Mahaamaha neranthannil nadhigalum punidhamaagum
Naanmarai potridum Naaranane charanam
(Aara)

Kalaimaamani Thiru Naghai Mughundhan, has written the following Foreword (Anindhurai ), dtd 2.2.2010 to the book “108 Divya Kshetra Keerthanaigal “composed by Dr. Rukmini Ramani :

எல்லாம் வல்ல பரம் பொருளாகிய திருமால், ஏழுலகும் தனிக்கோல் செல்ல சிரிய சிம்மாசனத்தில் வீற்றிருந்து ,ஸ்ரீ வைகுண்ட உலகில் எழுந்தருளி உள்ளான்.
ஸ்ரீவைகுண்ட உலகிற்கு வரும்பேறு பெற்றவர்கள் தான், தரிசிக்க இயலும் . அத்தகைய எல்லை இல்லாத இன்பத்தை மண்ணுலகில் பக்தர்களுக்கு வழங்க , நாம் அர்ச்சித்து பூஜிக்கும் வகையில் அர்ச்சாவதாரமாக பல திவ்ய தேசங்களில் எழுந்தருளியுள்ளான்.
எம்பெருமான் மீது பக்தியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள்.அவ் ஆழ்வார்கள் சென்று பாடிய திவ்ய தேசங்களே 108 திருப்பதிகள் என்றும் 108 திவ்ய தேசங்கள் என்றும் சம்பிரதாயமாக அழைக்கப்படுகின்றன.
பத்து ஆழ்வார்கள் , ஆண்டாள் நாச்சியார் என பதினோரு திருமாலடியார்கள் காலத்தால் , இடத்தால் வேறுபட்டவர்கள் . ஒரே காலத்தில் , ஒரே ஊரில் உள்ள இறைவனை பாடியவர்கள் அல்ல.
ஆனால் 108 திவ்ய தேசத்துஎம்பெருமான்கள் மீது, திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 108 திருப்பதி அந்தாதி என்று தனது அஷ்டப் பிரபந்தத்தில் பாடி அருளிச் செய்துள்ளார். இவர் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சதகுரு தியாக பிரும்மம் , ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் சில திவ்ய தேசத்து எம்பெருமான்களை பாடியுள்ளனர்.
இவர்களுக்குப் பிறகு 108 திவ்ய தேசங்களையும் அதன் சிறப்புகளையும், பாடியவர் என்கிற பெருமை , தமிழ் த்யாகய்யரின் அருந்தவப் புதல்வி திருமதி. ருக்மிணி ரமணி அவர்களை சாரும்.
பாபநாசம் சிவனின் புதல்வி திருமாலைப் பாடி சைவ , வைஷ்ணவ அபேதத்தை தெய்வத்தில் வேறுபாடில்லை என்பதைப் காட்டியுள்ளார்.
திருமதி ருக்மிணி ரமணி அவர்கள் இந்த எம்பெருமான்களது கல்யாண குணங்களை பாடுகிற சமயம் , தாயாரையும் சேர்த்து , குறிப்பாக தாயாரை முதலில் பாடி பிறகு எம்பெருமானைப் பாடியுள்ளது, பிராட்டியின் வழியாகத்தான், பெருமாளின் கருணையைப் பெறமுடியும் ,பெறவேண்டும் என்கிற ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, பாராட்டுக்குரியது .
திவ்ய தேசத்து புராண , வரலாற்றுக்களையும் இணைத்து கீர்த்தனை இயற்றியுள்ளது பிரமிக்க வைக்கிறது.
திருக்கண்ணங்குடி பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வார் வரலாற்றில் தொடர்புடையது. அந்த செய்தியையும் அதாவது , உறங்காப்புளி (புளிய இலைகள் , அங்கு இரவில் குவிந்து மடங்கி உறங்குவதில்லை )ஊராக்கிணறு, தோலா வழக்கு என்கிற நடந்த செய்தியையும் , திருநாகைக்கு திருநாகை அழகியார் சௌந்தர்ய வரதன் எழுந்தருளிய புராணமும் இவரது கீர்த்தனைகளில் இணைத்து பாடியுள்ளது ,இவர் கீர்த்தனைகளை இயற்றவில்லை , பூமாலை வாடி விடும், பாமாலை வாடாது என்று இறைவன் மீது சஙகத்தமிழ் பாமாலை பாடிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி , ஆண்டாள் நாச்சியாரே இவரை ஆண்டாள்; உட்புகுந்து தடுத்தாட்கொண்டாள்.
இதன் வெளிப்பாடுதான் இத்தகு கீர்த்தனைகள்,பறைசாற்றும் இவரது கீர்த்தியை என்றால் மிகையல்ல.
இசை உலகிற்கு இது மற்றுமொரு வரப்பிரசாதம்.
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால், இப்பாமாலையைப் படிப்போரும், பாடுவோரும், இயற்றியவரும் திருவருள் பெற்று பல்லாண்டு வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறேன்.

rukminiramani #carnaticsong #carnatic #carnaticsongs #108divyadesam #bhakthi #papanasamsivan #rukminiramani

Leave a Comment